Home South Reel நடிகரும் எழுத்தாளருமான கிரிஷ் ரகுநாத் கர்னாட் மரணம்!

நடிகரும் எழுத்தாளருமான கிரிஷ் ரகுநாத் கர்னாட் மரணம்!

0
SHARE
Girish Karnad
Girish Karnad

பிரபல நடிகரும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கிரிஷ் ரகுநாத் கர்னாட் இன்று காலை பெங்களூருரில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன் 81 வயதில் மரணமடைந்துள்ளார். 1938ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் பிறந்த இவர் கர்நாடக பல்கலைகழகத்தில் கணிதம், புள்ளியியல், அரசியல் மற்றும் பொருளாதார துறையில் பட்டம் பெற்றார். இலக்கியம் மீது கொண்ட ஆர்வத்தினால் பின்னர் முழு நேர எழுத்தில் ஈடுபட தொடங்கினார். இவர் முதல் படைப்பான யவாதி‘, மஹாபாரத கதாபாத்திரங்களை மையமாக கொண்டு 1961 ஆம் ஆண்டு எழுதப்பட்டு மிகவும் பிரபலமானது. திரைப்படங்களுக்கான தேசிய விருது, சாகித்ய அகடமி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷண் வரை பல விருதுகளை வாங்கியுள்ளார். நாடகங்களில் பெரும்பாலும் அரசியல் பேசும்போது ஆட்சியாளர்களின் சிக்கலை தவிர்க்க அதிகம் வரலாற்று கதாபாத்திரங்களை பயன்படுத்தி அதன் மூலம் சம கால அரசியலை பொருத்தி விமர்சிப்பார்கள். அப்படி முகமட் பின் துக்ளக்கை வைத்து அப்போதைய அரசியலை இவர் கடுமையாக விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையானது. இருந்தாலும் இவரின் துக்ளக் கதாபாத்திரங்கள் உலக அவளில் பாராட்டப்பட்டது.இதையடுத்து 1970 ஆம் ஆண்டில் உ. ன். அனந்தமூர்த்தியின் நாவலை தழுவி உருவாக்கிய சமஸ்காராஎன்ற படத்தில் நடிகராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பங்கு பெற்றவர் பின் தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எழுத்து இயக்கம் நடிப்பு என திரைத்துறையின் ஆல்ரவுண்டராக இருந்துள்ளார் . தமிழில் ரட்சகன், காதலன், காதல் மன்னன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here