Home South Reel அஜித் பிறந்தநாள் பகிர்வு!

அஜித் பிறந்தநாள் பகிர்வு!

0
SHARE
AjithKumar MajjaTamil
AjithKumar MajjaTamil

தலபேர கேட்ட உடனே சும்மா அதிருதுல்லடயலாக் என்னமோ ரஜினி டயலாக் தான்.. ஆனா தியேட்டர்ஸ்ல இவரோட பெயர் வந்ததும் , இவர் ரசிகர்களோட கொண்டாட்டத்தை பார்க்கும் போது இந்த டயலாக் தான் நியாபகம் வருது.

சினிமா என்ட்ரீ

பைக் மேல் உள்ள ஆசையால் பாதியிலேயே பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு மெக்கானிக் ஆனவர்.. அப்புறம் ஆங்காங்கே நடந்த பைக் ரேஸில் கலந்து கொண்டிருந்தார் .. அதற்கான பணத்தேவையை பூர்த்தி செய்வதர்க்கு சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து கொண்டிருந்தார் .. அந்த நேரத்தில் தான் சினிமா சான்ஸ் இவரை தேடி வந்தது. “என்வீடு என் கணவர்என்ற படத்தில் ஒரு சின்ன ரோல் பண்ணாரு.. அது தான் அவரோட முதல் படம்.. அதன்பின் தெலுங்கில் ஒரு படம் ஹீரோ வாக நடித்துவிட்டு திரும்பவும் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்..அப்படியே சினிமா வாய்ப்பும் தேடிக்கொண்டிருந்தார்.. வேட்டி விளம்பரத்தில் நடிக்கும் போது தான் இப்பொழுது அஜித்தின் மேனேஜராக இருக்கும் சுரேஷ் சந்திரா வின் அறிமுகம் கிடைத்ததுஅவர் தான் அமராவதி டைரக்டர் செல்வா விடம் அஜித்தின் போட்டோஸ் ஐ காண்பித்திருக்கிறார்இந்த மாதிரி பையனை தான் தேடிகிட்டு இருக்கோம் உடனே வர சொல்லுங்க னு சொல்லி அஜித்தை அமராவதி படத்தில் நடிக்க வைத்தார் ..

விஜய்யுடன் சந்திப்பு

AjithKumar
AjithKumar

அமராவதி படத்தின் தியேட்டர் ரெஸ்பான்ஸை பார்க்க அஜித் செல்வா அண்ட் ஒளிப்பதிவாளர் இமயவரம்பன் இவர்களெல்லாம் கமலா தியேட்டரில் பைக்கில் நின்று கொண்டிருக்கும்போது நடிகர் விஜய் தன்னோட நாளைய தீர்ப்பு பட ஒளிப்பதிவாளர் இமயவரம்பனை பார்த்து கை காட்ட , அவர் தான் அஜித்துக்கு விஜயை அறிமுகப்படுத்துயிருக்கிறார் அஜித் பர்ஸ்ட் படம் என்பதால் ஆல் தி பெஸ்ட் பாஸ் னு சொல்லி கட்டி பிடித்து கொண்டனர்

சினிமா ரீ என்ட்ரி

AjithKumar
AjithKumar

பைக் ரேஸில் கலந்துக்க காசு வேணும்என்ற ஒரே காரணத்துக்காக எந்த வாய்ப்பையும் வேண்டாம் என்று சொல்லாமல் படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து கொண்டிருந்தார். அதன் பின் பைக் ரேஸில் நடந்த விபத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். பவித்ரா படத்தில் ஆபரேஷன் செய்து ஆஸ்பத்திரியில் இருக்கின்ற சீன் காக , உண்மையில் அஜித் சிகிச்சை எடுத்து கொண்டிருந்ததை எடுத்தாங்க.. அந்த படத்திற்கு பின்னர் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.. சினிமாவுக்கு வந்த பிறகு எதுக்கு சீரியலில் நடிக்கனும் அப்படிங்கிற எண்ணம் சினிமா ஆசையா அவருக்கு உத்வேக படுத்தியது. அதன் பின் தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

ஷாலினிஅமர்க்களம்

AjithKumar
AjithKumar

அமர்க்களம் படத்தில் நடிக்க ஷாலினி முதலில் ஒத்துக்கொள்ளவில்லையாம்.. அஜித் ஷாலினிக்கு போன் பண்ணி பேசிய பிறகு ஒத்து கொண்டாராம்..படத்தில் ரீல் பெட்டியை எடுத்து வரும் காட்சியில் ஷாலினியின் கைகளில் உண்மையிலேயே கத்தி பட்டு ரத்தம் வர தொடங்கியதால்.. ஒட்டு மொத்த படப்பிடிப்பும் உறைந்து நிற்க , அஜித் முதலுதவி செய்தாராம். ஒரு நாள் அஜித் வேகமாக இயக்குனர் சரணிடம் சென்று படத்தின் ஷூட்டிங்கை ஒரே ஷெடியூலில் முடிச்சிருங்க.. ரொம்ப நாள் இந்த படத்துல நடிச்சேன்னா ஷாலுவை லவ் பண்ணிடுவேன் போல என்று சொல்ல , பக்கத்தில் இருந்த ஷாலினி வெட்கத்தில் தலை குனிந்திருக்கிறார். அங்குதான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

தல

AjithKumar
AjithKumar

இயக்குனருக்கும் , தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக , அஜித்தின் 30 வது படம் ட்ராப் ஆக , அஜித்க்கு நியாபகம் வந்தது ஸ் ஜே சூர்யாவின் அசிஸ்டன்ட் டைரக்டர்.. அவரை சந்தித்து ஏதாவது கதை இருக்கா? என்று கேட்க, அவர் சொன்ன ஒன் லைனில் உருவானது தான் தீனா. அவருதான் இன்றைய சக்ஸஸ்புல் டைரக்டர் ஏ.ஆர் முருகதாஸ். இந்த படம் தான் அஜித்தை ஒரு மாஸ் ஹீரோ வாக மாற்றியது..இந்த படத்திற்கு பிறகுதான் “தல” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்..அதன் பிறகு வந்த அனைத்து படங்களும் அஜித்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றதுகுறிப்பாக மங்காத்தா வீரம் வேதாளம் போன்ற படங்கள்..அஜித் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஆக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் திரையை தாண்டி அவரிடம் இருக்கும் சில தகுதிகள் தான்..தன்னம்பிக்கை மிக்கவர், எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வந்தவர், விளம்பரங்களை விரும்பாதவர் இவை தான் அவரை மேலும் உயர்த்துகிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here