Home Movie Reviews ‘அவென்ஜர்ஸ் எண்ட் கேம்’ திரைவிமர்சனம்

‘அவென்ஜர்ஸ் எண்ட் கேம்’ திரைவிமர்சனம்

0
SHARE
avengers endgame

ஹாலிவுட்டில் வருடத்திற்கு ஒரு படமாவது உலகம் முழுவதும் உள்ள ஹாலிவுட் பட ரசிகர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் வந்துவிடும். அப்படி வெளிவந்துள்ள படம் தான் இந்த அவெஞ்சர் எண்ட் கேம் படம்.

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்னால் நீங்கள் 21 ஹாலிவுட் படங்களைப் பார்த்திருக்க வேண்டும். அப்போது தான் இந்த அவெஞ்சர்ஸ் படம் கொஞ்சமாவது புரியும்.

ஐயன் மேன், ஐயன் மேன் 2, ஐயன் மேன் 3, த இன்கிரெடிபிள் ஹல்க், அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான், தி அவெஞ்சர்ஸ், தோர், தோர் ராக்நரோக், தோர் தி டார்க் வேர்ல்டு, ஆன்ட் மேன், கார்டியன்ஸ் ஆப் த கேலக்சி, கார்டியன்ஸ் ஆப் த கேலக்சி – 2, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர் மேன் ஹோம் கமிங், கேப்டன் அமெரிக்கா சிவில் வார், கேப்டன் அமெரிக்கா தி வின்டர் சோர்ஜெர், கேப்டன் அமெரிக்கா தி பர்ஸ்ட் அவெஞ்சர், பிளாக் பாந்தர் ஆகிய படங்களைப் பார்த்திருந்தால் தான் இந்த அவெஞ்சர் எண்ட் கேம் கதாபாத்திரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.

விண் கல், உண்மைக் கல், சக்திக் கல், மனம் கல், ஆன்மா கல், நேரம் கல் என இந்த பிரபஞ்சத்தின் பல கிரகங்களில் இருக்கும் கற்களை எடுத்து தன் கையில் இருக்கும் ஒரு கவசத்தில் பொருத்திக் கொண்டால் இந்தப் பிரபஞ்சத்தையே ஆளும் வல்லமை டைட்டன் கிரகத்தைச் சேர்ந்த தானோஸ் என்பவனுக்குக் கிடைக்கும். அந்தக் கற்களை அடைய அவன் பல போர்களை நடத்துகிறான். அவற்றை அவெஞ்சர்ஸ் குழுவினர், கார்டியன்ஸ் ஆப் கேலக்சி குழுவினர் ஒன்று சேர்ந்து தானோஸை எதிர்க்கிறார்கள். இதில் வில்லன் வென்று விட சில சூப்பர் ஹீரோக்கள் மறைந்து விடுவது மாதிரி இதற்கு முன் வந்த சிரியஸின் முடிவு இருந்தது.

இன்று வெளியாகி இருக்கும் அவெஞ்சர் எண்ட் கேம் அதற்கான தீர்வை தெரிவித்துள்ளது. படத்தில் சூப்பர் ஹீரோக்கள் ஐந்து வருடத்திற்கு முன் டைம் டிராவல் செய்து வில்லனை அழிக்க என்னென்ன முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் முதல் பாதி மெதுவாக செல்கிறது முதல் பாதியில் ஆக்க்ஷன் காமெடி அனைத்தும் கலந்துள்ளது. இரண்டாவது பாகத்தில் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வில்லனை அழித்தார்களா இல்லையா? என்பதுதான் மீதி கதை.

சிறப்பம்சங்கள்

படத்தின் நீளம்

ஒளிப்பதிவு

அனைவரின் நடிப்பு

பலவீனங்கள்

விஜய் சேதுபதி வாய்ஸ்

Overall Rating : 4/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here