Home South Reel பிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 18

பிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 18

0
SHARE

பிக் பாஸ் 3யின் 18ஆம் நாள் காலை பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் சாண்டி மற்றும் கவின் அனைவரையும் பற்றி பாடல் பாடினர். இதையடுத்து பிக் பாஸ் சாண்டி ,கவின் மற்றும் மீராவை அழைத்து கவின் வீட்டின் இன்ஸ்பெக்டராகவும் ,மீரா கான்ஸ்டாப்ளாகவும் மற்றும் சாண்டி ஆவிகளுடன் பேசும் திறமையுள்ள சாமியார் என்று கூறினார் .இதையடுத்து மூவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடைகளை அணிந்து கொண்டனர்.

பின்னர் கவினும் மீராவும் வீட்டிலுள்ள அனைவரிடம் புலன் விசாரணை செய்கின்றனர். இதையடுத்து பிக் பாஸ் வனிதாவை அழைத்து கவின் கொலையாளியை கண்டுபிடிக்க விசாரணை செய்துகொண்டிருப்பதாக கூறுகிறார், அதனால் கவினின் துப்பாக்கியை ஒளித்து வைத்து கவினை கொலைசெய்யுமாறு கூறுகிறார். அதன்படி முகென் துப்பாக்கியை ஒளித்துவைக்கிறார். பின்னர் லோஸ்லியாவும், கவினும் ஒரே தட்டில் சாப்பிடுகின்றனர். இதையடுத்து டாஸ்க் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது கவினுக்கும், சேரனுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதையடுத்து சேரன் பிக் பாஸ்ஸிடம் இந்த டாஸ்க் எனக்கு புரியவில்லை , டாஸ்க் பற்றி விளக்குங்கள், இல்லை இந்த டாஸ்கில் இருந்து என்னை விலக்கிவிடுங்கள் என்று கூறுகிறார்.

பின்னர் பிக் பாஸ் கவின் கொலை செய்துவிட்டதாகவும், அவரை மயானத்திற்கு அழைத்துசெல்லுமாறு கூறினார். அதன்படி கவின் மயானத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து பிக் பாஸ் ,கவின் இறந்துவிட்டதால் மீரா இன்ஸ்பெக்டராக பதவி ஏற்கிறார் என்று அறிவித்தார் .பின்னர் மீராவை யார் மீது சந்தேகம் இருக்கிறது என்று பிக் பாஸ் கேட்டார். அதற்கு மீரா லோஸ்லியா மீதும் ,மதுமிதா மீதும் சந்தேகம் இருப்பதாக கூறினார். உடனே பிக் பாஸ் வனிதா தொலைபேசிக்கு அழைத்தார். உடனே வனிதா அனைவர்க்கும் முன்பு நானும் முகேனும் தான் கொலையாளிகள் என்று அறிவித்தனர்.

பின்னர் பிக் பாஸ் திரையில் யார் யார் எப்படி கொலை செய்யப்பட்டனர் என்பதை திரையில் போட்டு காட்டினார். பின்னர் இந்த டாஸ்கில் சிறந்து விளங்கிய போட்டியாளர்கள் வனிதா பங்கு முகென் மற்றும் சாக்ஷி என தேர்ந்தெடுத்தனர். இதைதொடர்ந்து டாஸ்கில் பங்கு எடுக்காத இரண்டு நபர்கள் சரவணன் மற்றும் சேரன் என்று அறிவித்தனர். இதையடுத்து பங்கு எடுக்காத நபர்கள் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் பிக் பாஸ் அறிவித்தார். பின்னர் அனைவரும் தேர்ந்தெடுத்து சேரனையும் கவினையும் சிறையில் அடைக்க முடிவுசெய்தனர்.

இதையடுத்து சேரனுக்கு பதில் லோஸ்லியா சிறைக்கு போறேன் என்கிறார் ,அதற்கு வனிதா அப்படிலாம் பண்ண முடியாது என்று கத்தினார். உடனே லோஸ்லியா அங்கிருந்து கழிவறைக்கு சென்றுவிட்டார். உடனே கவின் லோஸ்லியாவை சமாதானம் செய்கிறார். ஆனால் லோஸ்லியா இனிமேல் என்கிட்டே பேசாத என்று கவினிடம் கூறுகிறார். இதையடுத்து சரவணன் அனைவரிடமும் டாஸ்க் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இந்நிகழ்வுகளுடன் 18ஆம் நாள் நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here