Home South Reel பிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 24

பிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 24

0
SHARE
Bigg Boss 3 Tamil
Bigg Boss 3 Tamil

பிக் பாஸ் 3யின் 24ஆம் நாள் காலை ஆடலுடன் பாடலை கேட்டுஎன்ற பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் சாக்ஷி ,சேரனிடம் லோஸ்லியாவுக்கும் ,கவினுக்கும் என்ன பிரச்சனை என்று உங்களிடம் கூறினார்களா என்று கேட்கிறார். அதற்கு சேரன், தன்னிடம் எதுவும் கூறவில்லை என்கிறார். பின்னர் டிக் டிக் டாஸ்கின் மூன்றாவது சுற்றில், வைக்கப்பட்டு இருக்கும் கடிகாரங்களில் 15 கடிகாரங்களின் அலராமை நிறுத்தவேண்டும். அதற்கு கவின் மற்றும் அபிராமி சென்றனர். இந்த சுற்றில் இருவரும் எந்த மதிப்பெண்ணும் பெறவில்லை.

பின்னர் நான்காவது சுற்றில் தர்ஷன் மற்றும் சாக்ஷி கலந்து கொண்டு எந்த மதிப்பெண்ணும் பெறவில்லை. பின்னர் சாக்ஷி மாற்றும் ஷெரின் இருவரும் ஸ்மோக்கிங் ரூமில் லோஸ்லியா கோவமாக இருப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து பலமுறை அறிவுறுத்தியும் ஸ்மோக்கிங் சோனில், ஒருவருக்கு மேல் இருந்திருக்கிறீர்கள். இன்று வீட்டின் தலைவி சாக்ஷியே இந்த விதிமுறையை கடைபிடிக்க தவறிவிட்டதால் லக்ஸரி மதிப்பெண்ணிலிருந்து 100மதிப்பெண் குறைக்கப்படுகிறது என்றார் பிக் பாஸ். இதனால் ஷாப்பிங்கிற்கு 1100மதிப்பெண்கள் மட்டுமே உள்ளது என்று பிக் பாஸ் அறிவித்தார்.

இதையடுத்து சாக்ஷி மதிப்பெண்கள் குறைந்ததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். பின்னர் நீயா நானா என்ற டாஸ்க் நடத்தப்பட்டது .அந்த டாஸ்கில் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை வைத்து, இந்த வீடு விவாத மேடையாக மாறப்போகிறது என்றும் ,மீரா இந்த போட்டியின் தொகுப்பாளர் என்றும் அறிவித்தார்.

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, மூன்று தலைப்புகளும் வழங்கப்பட்டது. இதையடுத்து முதல் தலைப்பு வீட்டின் சுத்தம் செய்யும் அணி:(A)கடமையை சரியாக செய்கிறார்கள் ,(B) வேலைசெய்வதுபோல் பாசாங்கு செய்கிறார்கள் என்ற தலைப்புக்கு முதலில் தர்ஷன் விவாதம் செய்தார், அவருக்கு எதிராக சரவணன் பேசினார் .அடுத்த தலைப்பு இந்த வீட்டில் நடப்பது நட்பா? இல்லை அதையும் தாண்டி புனிதமானதா? என்பதற்கு மதுமிதாவும் அவருக்கு எதிராக ரேஷ்மாவும் பேசினார். இதையடுத்து மூன்றாவது தலைப்பு, பிக் பாஸ் வீட்டில் மக்கள் பார்க்க விரும்புவது வாய்ப்பேச்சில் வல்லவர்களா, மௌன குருக்களா .இந்த தலைப்புக்கு கவின், லோஸ்லியா இருவரும் விவாதம் செய்தனர்.

பின்னர் கவின், லோஸ்லியாவிடம் சாக்ஷி மேல நல்ல நட்பு இருக்கு என்றும், நட்புக்கு மேல போகும்போது நா அவகிட்ட இத வெளியேபோய் பாத்துக்கலாம்என்று கூறினேன் என்றார். அதற்கு லோஸ்லியா நீ இத முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாம் என்றும், உனக்கும் சாக்ஷிக்கும் என்னால எந்த பிரச்சனையும் இல்லனா நா உன்கிட்ட பேசுறேன் என்றார். இதையடுத்து சாக்ஷி கவினிடம் நீ என்கிட்டே நண்பனா மட்டும் தான் பழகிட்டு இருக்கியா? என்று கேட்டார். அதற்கு கவின் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற உணர்வு வரும்போது நா உன்கிட்ட இந்த உறவ நம்ப வெளியேபோய் பத்துக்கலாம்னு சொன்னேன்ல என்றார். அதற்கு சாக்ஷி கொஞ்ச நாட்களுக்கு நாம் பேசவேண்டாம், இனிமேல் நீ யார்கிட்ட பேசுனாலும் எனக்கு பிரச்சனை இல்ல என்கிறார்.

இந்நிகழ்வுகளுடன் 24ஆம் நாள் நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here