Home South Reel பிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 26

பிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 26

0
SHARE
biggboss 3 day 26 highlights
biggboss 3 day 26 highlights

பிக் பாஸ் 3யின் 25ஆம் நாள் இரவு மீராவுக்கும் தனக்கும் நடந்த பிரச்னையை நினைத்து சாக்ஷி அழுகிறார். பின்னர் அனைவரும் அவரை சமாதானம் செய்கின்றனர். பின்னர் லோஸ்லியா சப்பாத்தியை கத்தியால் குத்தியதற்கு ஷெரினிடம் மன்னிப்பு கேட்கிறார். உடனே ஷெரின் இந்த குணம் தவறானது என்று அறிவுறுத்துகிறார். பின்னர் சாக்ஷியும் கவினும் நடந்த பிரச்சனை பற்றி பேசி கொண்டே இருவரும் அழுகின்றனர்.

26ஆம் நாள் காலை பிக் பாஸ், சாக்ஷி மற்றும் மீராவின் தண்டனை காலம் நிறைவடைந்தது என்று அறிவித்தார். பின்னர் இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து அபிராமி வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பரதநாட்டியம் கற்றுத்தருகிறார்.

பின்னர் கவின் சேரனிடம் நடந்த பிரச்சனை பற்றி விவரிக்கிறார். அதற்கு சேரன் நீ அனைவரையும் அழைத்து, எங்கள் மூவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது என்று கூறிவிடு என்கிறார். அதுபோன்றே கவினும் அனைவரையும் அழைத்து கூறி கழிவறைக்கு செல்கிறார்.

கழிவறைக்கு சென்ற கவின் தான் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தி கதறி அழுகிறார். சத்தம் கேட்டு வந்த ரேஷமாவும், சாண்டியும் கவினை வெளியே வருமாறு கூறுகின்றனர். பின்னர் வெளியே வந்த கவினை, சரவணன் ,ரேஷ்மா, சாண்டி ஆகியோர் சமாதானம் செய்கின்றனர்.

பின்னர் கவின் லோஸ்லியாவை அழைத்து நான் இனிமேல் யாருடைய உணர்வுகளுடனும் விளையாடமாட்டேன், நான் இந்த விளையாட்டை நிறுத்திவிடுகிறேன் என்று கூறி மன்னிப்பு கேட்கிறார். அதற்கு லோஸ்லியா நீ என்னிடம் மன்னிப்பு கேட்காத ,சாக்ஷியிடம் மன்னிப்பு கூறு என்றும், இப்ப நீ பேசுறது கூட நடிக்கிற மாதிரி இருக்கு என்கிறார். உடனே கவின் கேமரா முன்பு நின்று என்னாலே இங்க இருக்க முடில, நான் வெளிய போறேன் என்கிறார்.

பின்னர் சாக்ஷி கவினிடம் பேச அவரை அழைக்கிறார். அதற்கு கவின் எல்லாம் முடிஞ்சுருச்சு, நான் போறேன் என்கிறார். அதற்கு ஷெரின் கவினை சமாதானம் செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here