Home South Reel மன்சூர் அலி கான் மீது வழக்கு!!

மன்சூர் அலி கான் மீது வழக்கு!!

0
SHARE
Mansoor Ali Khan
Mansoor Ali Khan

நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் முக்கிய அங்கம் வகிப்பவர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். சமீபத்தில் முகிலன் மீது சாட்டப்பற்ற பாலியல் குற்றம் குறித்து முகிலனுக்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பேசினார். பேசும்போது அவர் மத்திய பா..க அரசையும் அரசியல் வாதிகளையும் விமர்சித்தார். மேலும் அமித்ஷா பற்றியும் அவர் பேசி இருப்பதாக தெரிந்ததும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் எட்டாம் (ஆகஸ்ட் 8) தேதிவரை கைது செய்ய முடியாதபடி வழக்குக்கு தடை வாங்கியுள்ளார் மன்சூர் அலிகான். இதுகுறித்து பேசிய மன்சூர் அலிகான், “இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல். நான் நீதிமன்றத்தை நம்புகிறவன். எதையும் சட்டப்படி சந்திப்பேன்என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here