Home Movie Reviews செக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம்

செக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம்

0
SHARE
CCV movie
CCV movie

நடிகர்கள் : அரவிந்த் ஸ்வாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டையானா ஏறப்பா, பிரகாஷ் ராஜ், தியாகராஜன், ஜெயசுதா.

சமீபக் காலத்தில் மணிரத்னம் படம் என்று சொல்லும் அளவிற்கு அவர் எடுத்தப் படங்கள் நிரூபிக்க வில்லை. ஆனால் செக்கச் சிவந்த வானம் அவரின் ஸ்டைலில் அடுத்த ஒரு வெற்றி படைப்பாக சேர்ந்து விட்டது.

கதை : பிரகாஷ் ராஜ் க்ரிமினல் வேலைகளைத் தொழிலாக செய்யும் பெரிய கேங்ஸ்டர். அவரைக் கொலை செய்ய யாரோ முயற்சி செய்கிறார்கள். பிறகு பிரகாஷ் ராஜ் இறந்து விடுகிறார். இவரின் மகன்களான அரவிந்த் ஸ்வாமி, அருண் விஜய் மற்றும் சிம்பு இந்த மூவரில் யாரோ தான் இதை செய்து இருக்கிறார்கள் என்று அவர்களுக்குள்ளேயே சந்தேகப் படுகிறார்கள்.

அதோடு பிரகாஷ் ராஜிற்குப் பிறகு வாரிசாக யார் இறுக்கப் போகிறார்கள் என்ற போட்டியும் இவர்களுக்குள் வருகிறது. பிரகாஷ் ராஜை யார் கொலை செய்தார்கள் ? இவர்கள் மூவரில் யார் வாரிசானார்கள் ? என்பதே மீதிக் கதை.

மணிரத்னம், இத்தனைக் கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். அரவிந்த் ஸ்வாமியை படத்தில் தனியாக காட்டி இருக்கிறார். அருண் விஜய் மிக ஸ்டைலாக இருக்கிறார் ஆக்சன் காட்சிகளை சூப்பராக செய்து இருக்கிறார்.

சிம்பு தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்து இருக்கிறார். விஜய் சேதுபதிக்கு எல்லா படங்களிலும் வருவதுப் போல் அவருக்கே உறிய வசன உச்சரிப்பை மணிரத்னம் ஸ்டைலில் கொடுத்து இருக்கிறார்.

ஜோதிகா மற்றும் அதிதி ராவ்வின் கதாபாத்திரங்கள் அவர்களின் அனைத்துக் காட்சிகளிலும் மிக அருமையாக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் இலங்கைப் பெண்ணாக வருகிறார் ஆனால் அவரின் பர்பார்மன்ஸ் இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம். டையானா ஏறப்பா சில காட்சிகள் வந்து செல்கிறார். திரியாகராஜன், ஜெயசுதா இருவரும் அவர்களின் கதாப்பாத்திரத்தை நன்றாக செய்து இருக்கின்றனர்.

.ஆர் ரஹ்மான் படத்தின் அடுத்த கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு படத்தின் இசை இருக்கிறது. ஆக்சன் படத்திற்கு தேவையான இசையைக் கொடுத்து இருக்கிறார். இரண்டாம் பாதி மட்டும் சற்று ஸ்லோவாக உள்ளது. படத்தில் மக்கள் எதிர் பார்த்த கிளைமாக்ஸில் இருந்து முழுவதும் ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறார்கள்.

மொத்தத்தில் மணிரத்னம் படைப்பில் இருந்து இன்னொரு முழு க்ரைம், ஆக்சன் படமாக இப்படம் வெற்றி பெற்று இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here