Home Movie Reviews தில்லுக்கு துட்டு-2 திரை விமர்சனம்.

தில்லுக்கு துட்டு-2 திரை விமர்சனம்.

0
SHARE

ஹீரோ சந்தானம் ரொம்ப நாட்கள் கழித்து ஒரு நல்ல படத்தை கொடுத்துருக்காரு.. ரொம்ப வருஷம் கழித்து இவரோட காமெடி ஸ்க்ரீன் ல ஒர்க் அவுட் ஆயிருக்கு.. சந்தானமும் அவரோட மாமா மொட்டை ராஜேந்திரனும் யாரையும் மதிக்காமல் , இரவு யாரையும் தூங்க விடாமல் குடித்து கலாட்டா செய்றவங்க.. இவங்கள அடக்குறதுக்கு ஏரியால இருக்குற டாக்டர் ஒருத்தர் அவர் ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் நாயகி ஸ்ரீதா காதலிக்க வைக்கிறார்.. ஏன்னா ஸ்ரீதா கிட்ட யாரு காதலை சொன்னாலும் ஒரு பேய் அவர்களை அடித்து துவைத்து விடும்.. அப்படி ஒரு முறை அடி வாங்கியவர் தான் அந்த டாக்டர்.. எல்லாரும் எதிர்பார்த்தது போல இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.. சந்தானம் காதலை சொல்ல வரும் போது பேய் அவரை அடித்து துவைத்து விடுகிறது..

கேரளா மந்திரவாதியான சரிதாவின் அப்பா, மகளுக்கு காவலாக அப்படி ஒரு சூனியத்தை வைத்திருக்கிறார். இதனை அறிந்த சந்தானம் அவரை சந்திக்க கேரளா செல்கிறார்..ஸ்ரீதாவனுக்கு அவர்தான் சூனியம் வைத்தாரா? இல்லை உண்மையிலேயே பேய் பிடித்திருக்கிறதா? என்பதுதான் மீதி கதைபடத்துல சந்தானம் பில்டப் எதுவும் இல்லாம யதார்த்தமாக வருகிறார். அவருக்கு ஈடு கொடுத்து காமெடியில் பின்னி எடுக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.. படத்தில் பாடல்கள் கொஞ்சம் சுமார் தான்.. பின்னணி இசை நன்றாக இருக்கிறது.. கதை இடைவேளைக்கு பின் கொஞ்சம் மெதுவாக நகர்ந்து பின் சூடு பிடிக்கிறது.. மொத்தத்தில் தில்லுக்கு துட்டு சந்தானத்திற்கு நல்ல கம்பாக்.

overall rating – 3/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here