Home Movie Reviews இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைவிமர்சனம்

இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைவிமர்சனம்

0
SHARE
ispade rajavum idhaya raniyum

ஒரு முரட்டு தனமான பையனுக்கும், பராக்டிக்களான பொண்ணுக்கும் இடையே உள்ள காதலில் வரும் சிக்கல்களே இந்த படத்தின் கதை.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு தலைப்பு அளித்துள்ளனர். ஹீரோ கவுதம் (ஹரிஷ் கல்யாண்) அவர் தனது குழந்தை பருவத்திலிருந்து கஷ்டங்களை தாண்டி வந்ததால் கோபம், முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவர். நடிகை தாரா (ஷில்பா மஞ்சுநாத்) சந்தோஷமான சூழலில் வாழ்ந்துவருகிறார்.

கவுதமை அவரது தந்தை மற்றும் நண்பர்கள் கவனித்து கொண்டாலும் அவர் தன் வாழ்க்கையில் முக்கியமான ஒரு நபரை இழப்பது போல் உணரும் நேரத்தில் அவர் பல எதிர்பாராத சூழ்நிலைகளில் தாராவை சந்தித்துக் கொண்டார். மேலும், இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உணர்ந்தார்கள்.

கவுதம் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஹரிஷ் கல்யாண் அடிக்கடி கோபப்படும் இளைஞனாக நடித்துள்ளார். ஒருகட்டத்தில், காதலியை கொலை செய்யும் அளவிற்கு காதலன் ஹரிஷ் மனநிலை மாறுகிறது, பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதி கதை.

மாகாபா ஆனந்த் காமெடியில் அவரது பங்கை மிக சிறப்பாக அளித்துள்ளார். அதே சமயம் பாலசரவணனும் மிக சிறப்பாக நடித்துள்ளனர். கதாநாயகியின் நடிப்பு படத்திற்கு ப்ளஸ்.

இந்த காலத்து இனைஞர்களுக்கு ஹரிஷின் காதல் காட்சிகள் விருந்தாக இருக்கும். தேவை இல்லாத காட்சிகள் நிறைய இரண்டாம் பாதியில் உள்ளதால் சற்று போர்தான். முழுக்க முழுக்க காதலை பற்றி பேசும் படமாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளது.

ரேட்டிங் – 3/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here