Home Movie Reviews ‘ஜாக்பாட்’ திரை விமர்சனம்

‘ஜாக்பாட்’ திரை விமர்சனம்

0
SHARE
Jackpot Movie Review
Jackpot Movie Review

கல்யாண் இயக்கத்தில், ஜோதிகா மற்றும் ரேவதி ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜாக்பாட்“. இப்படம் சூர்யா சிவகுமார் மற்றும் செந்தில் குமார் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.

ஜோதிகா (அக்ஷயா) மற்றும் ரேவதி (மாஷா), இருவரும் வண்டிகளை திருடுவது, பொது இடத்தில் ஏமாற்றி பணம் வசூலிப்பது என குறுக்கு வழிகளில் பணம் சமபதித்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து திருட்டு தொழிலால் சிறைக்கு செல்கின்றனர், சிறையில் இருக்கும் ஒரு பாட்டி ஜோதிகாவிடம், அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் இருப்பதாகவும், அந்த பாத்திரத்தை ஆனந்த்ராஜ் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

அந்த அக்ஷய பாத்திரத்தின் மீது ஜோதிகாவுக்கு ரேவதிக்கும் ஆசை வருகிறது. அந்த அக்ஷய பாத்திரத்தை திருடுவதற்காக இருவரும் ஆனந்த்ராஜ் வீட்டிற்கு செல்கின்றனர். அந்த பாத்திரத்தை ஆனந்த்ராஜை மீறி எப்படி திருடுகிறார்கள் என்பதை காமெடி கலாட்டாவாக காட்டியுள்ளது மீதமுள்ள கதை.

இப்படத்தில் ஜோதிகா ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றுகிறார். ரேவதி படம் முழுவதும் ஜோதிகாவுடன் சேர்ந்து திரியும் கதாபாத்திரமாகவும், ஜோதிகாவுக்கு ஈடாக ஒரு சில ஆக்ஷன் காட்சிகளிலும் தோன்றுகிறார். ஆனந்தராஜ் வில்லனாக இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியில் பெண் வேடத்தில் வரும் இவரின் காட்சிகள் காமெடியாக உள்ளது.

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ,மன்சூர் அலி கான் ,டைகர் தங்கதுரை என படத்தில் வரும் அனைத்து காமெடி நடிகர்களும் நகைச்சுவையை அதிகமாக கொடுத்துள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தவிர மற்ற அனைத்தும் காட்சிகளையும் நகைச்சுவையாக கொடுத்துள்ளனர். இப்படத்தில் நகைச்சுவை அதிகமாக உள்ளதால் ஜோதிகாவின் அக்ஷன் ரோல் குறைவாகவே காணப்படுகிறது. நகைசுவையூடன்னான வசனங்கள் படத்திற்கு இன்னும் சிறப்பை சேர்த்துள்ளது.

இப்படத்தில் வரும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சுமார். ஸ்கெட்ச் படத்தில் விக்ரமிற்கு கொடுத்த அதே பின்னணி இசையை ஜோதிகாவிற்கும் கொடுத்துள்ளனர். அழுத்தமில்லாத கிளைமாக்ஸ் மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் சிரிக்கவைக்கும் திரைப்படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here