Home Movie Reviews களவாணி 2 திரை விமர்சனம்

களவாணி 2 திரை விமர்சனம்

0
SHARE
kalavani 2 movie review
kalavani 2 movie review

விமல், ஓவியா, விக்னேஷிகாந்த், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் களவாணி 2.. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட கதையாக படத்தை இயக்கியிருக்கிறார் சர்குணம்.. உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார்.

அரசனூர் கிராமத்தில் எதை பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றி திரிபவர் விமல். அவர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊர் தலைவர் ஆக வேண்டும் என ஆசை படுகிறார். தற்கொலையில் இருந்து ஒருவரை விமல் காப்பாற்றுகிறார். அந்த ஒரே காரணத்திற்காக ஓவியா விமலிடம் காதலை சொல்கிறார்..ஒரு கட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தீர்மானிக்கிறார்.. ஊரில் இவருக்கு இருக்கும் பெயருக்கு தேர்தலில் வெற்றி பெறுவது அதிசயம் நிகழ்வது போல் தான்.. மேலும் அவரது மாமாவான துரை சுதாகரையும் ஓவியாவின் அப்பாவையும் எதிர்த்து போட்டியிடுகிறார். இறுதியில் வெற்றி பெற்றாரா? ஓவியாவை மணந்தாரா? என்பது தான் மீதி கதை.. இளவரசு, சரண்யா வழக்கம் போல் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்..விக்னேஷிகாந்த் , கஞ்சா கருப்பு காமெடி ஓகே வாக இருக்கிறது. இசை சுமார் தான். சில இடங்களில் பின்னணி இசை கேட்கவே இல்லை. படம் முழுவதும் தேர்தலை சுற்றியே நடக்கிறது. விமல் தான் இறுதியில் வெற்றி பெறுவார் என முன்கூட்டியே தெரிந்து விடுகிறது.. அதனால் சுவாரஷ்யம் பெரிதாக இல்லை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here