Home Movie Reviews கனா திரை விமர்சனம்

கனா திரை விமர்சனம்

0
SHARE
Kanaa
Kanaa

விளையாட்டை மையமாக வைத்து அதிகப் படங்கள் வந்து இருந்தாலும் கனா அவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது கதையைப் பார்க்கும் போது தெரிகிறது.

கிராமத்தில் இருக்கும் அப்பா மகள் பாசத்திற்கு கதை முழுவதும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். கிரிக்கெட்டில் கலந்துக் கொண்டு ஜெயிக்க வேண்டும் என்று கொள்கையோடு இருக்கும் பெண்ணிற்கு பக்க பலமாய் நிற்கும் அப்பா மகள் தான் படத்தின் கதை.

ஐஸ்வர்யா ராஜேஷ் அவரின் நடிப்புத்திறமையை படத்தில் முழுவதும் காண்பித்துள்ளார். ஒரு எளிமையான கிராமத்துப் பெண்ணின் தோற்றத்தில் இருக்கும் அவரின் நடிப்பு படத்திற்கு பிளஸ். அடுத்ததாக சத்யராஜின் நடிப்பைப் பற்றி சொல்லவே தேவை இல்லை அசத்தியுள்ளார்.

கிளைமாக்ஸில் வரும் கிரிக்கெட் மேட்ச் காட்சிகள் ரசிக்க வைத்துள்ளது. கொஞ்சம் எதிர் பார்த்த கதையே என்றாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதம் அனைவருக்கும் திருப்தியைக் கொடுக்கும். முக்கியமாக விளையாட்டையும் விவசாயத்தையும் எடுத்துரைக்கும் விதம் அருமை.

சில காட்சிகள் கொஞ்சம் அதிகப் படியாக இருப்பது ஒரு மைனஸ். ஐஸ்வர்யாவைக் காதலிக்கும் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் மட்டுமே படத்தில் காமெடி.

சிவகார்த்திகேயன் சீரியசான கதாபாத்திரத்தில் வியக்க வைத்துளார். தன் முதல் தயாரிப்பையே நல்ல படைப்பாக கொடுத்துள்ளார். குடும்பத்தோடு முக்கியமாக குழந்தைகளோடு சென்று பார்க்க வேண்டிய படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here