Home South Reel “கழுகு2” தயாரிப்பாளர் ஆடியோ வெளியிட்டுள்ளார்

“கழுகு2” தயாரிப்பாளர் ஆடியோ வெளியிட்டுள்ளார்

0
SHARE
Kazhugu2
Kazhugu2

சத்யாசிவா இயக்கத்தில், கிருஷ்ணா ,பிந்து மாதவி ஆகியோர் நடிப்பில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் கழுகு2”. இப்படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழுவின் செயல்பாடுகள் குறித்து ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை நான் புகழ்ச்சிக்காக கூறவில்லை, நான் அனுபவபட்டதால் கூறுகிறேன். ஏனென்றால் என் தயாரிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் கழுகு2 திரைப்படம், படப்பிடிப்பு தொடங்கும்போது ஒரு பட்ஜெட்டை நிர்ணயம் செய்கிரோம் ,இந்த பட்ஜெட்க்குள் படம் முடிஞ்சிடும் என்று கணிச்சிட்டு ,இதுல இருந்து கூடுதலா ஒரு தொகை கிடைக்கும் என்று நினைத்து, படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போதே தொகையை பிரித்து எடுத்துவிட்டார்கள் .ஆனால் நிர்ணயித்த பட்ஜெட்டை விட கூடுதலாக 20இலட்சம் செலவாகியது, இதுல எனக்கு 20இலட்சம் நஷ்டம்.

இதைப்பற்றி இயக்குனரிடம் கூறியபோது ,இயக்குனர் 8இலட்சம் , எடிட்டர் 3இலட்சம் விட்டுகொடுத்தனர். கடைசியில் 6இலட்சம் ரூபாய் குறைகிறது, என்று பிந்து மாதவியிடம் சம்பளத்தை குறைத்து கொள்ளுமாறு கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி ஜிஎஸ்கே அவர்களிடம் விஷயத்தை கூறினேன். அவரும் அனைவரையும் அழைத்து பேசி 5இலட்சம் ரூபாயை மீட்டுக்குடுத்துளார். நாங்கள் பிந்து மாதவியிடம் சம்பளத்தை குறைக்க சொன்னதற்கு அவர், நடிகர் சங்கத்தில் என்மேல் புகார் அளித்தார். இதனால் நடிகர் சங்கம், ஜெமினிக்கு லெட்டர் அனுப்பியுள்ளது . தயாரிப்பாளர்கள் பிரச்னையை விஷால் கண்டுகொள்வதில்லை, அவருக்கு நடிகர்கள் போடும் ஓட்டுகள் தேவை. தயாரிப்பாளர்கள் எங்க போய் செத்தாலும் விஷாலுக்கு கவலை இல்லை என்றும் பதிவுசெய்திருந்தார் .

Kazhugu 2
Kazhugu 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here