Home Movie Reviews மெஹந்தி சர்க்கஸ் திரைவிமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் திரைவிமர்சனம்

0
SHARE
mehandi circus movie review

எத்தனை படங்கள் வந்தாலும் காதல் மட்டும் அலுக்காது என்பதை உணர்த்தும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு காதல் படம். மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் நடுத்தர வயது கொண்ட ஒரு பெண்ணின் கணவரை தேடி அவரது மகள் மகாராஷ்டிராவில் இருந்து பூம்பாறைக்கு பயணிக்கிறாள்.

இன்னொருபக்கம் பூம்பாறையில் கேசட் கடை வைத்திருக்கும் இளைஞன் ஜீவாவிற்கும் மற்றும் அதே ஊரில் சர்க்கஸ் கூடாரம் அமைத்திருக்கும் சன்னி சார்லஸின் மகள் மெஹந்திக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஜீவா மற்றும் மெஹந்தியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் ஹீரோயினின் உறவுக்கார பையன் ஜாதவின் (அஞ்சுர் விகாஷ்) உதவியுடன் காதல் தொடர்கிறது. மரண விளையாட்டான கத்தி வீச்சில் வெற்றி பெற்றால் பெண் தருவதாக பெண் கேட்டு போன ஜீவாவிடம் மெஹந்தியின் தந்தை கூறுகிறார். ஜீவா கத்தி வீச்சில் வென்று மெஹந்தியை கரம் பிடித்தாரா என்பதே கதை. இதையடுத்து மஹாராஷ்டிராவில் இருந்து வந்த பெண் யார் என்பதே மீதி கதை.

கொடைக்கானல் மலைகளும், இயற்கையின் பின்னனணியில் இளையராஜாவின் பாடல்கள். காதல் படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் படத்தின் கொண்டு வர முயற்சித்துளார் இயக்குனர்.

இது முதல் படம் என்பதால் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் நடிப்பை போக போக பார்க்கலாம். பல இடங்களில் ஆர்ஜே விக்னேஷ்காந்தின் காமெடியை விட ராஜூ முருகன் தான் தெரிகிறார். எல்லா படங்களிலும் வருவதுபோல் அதே எதார்த்தமான காட்சிகள் எளிதில் யூகிக்கக் கூடிய கதை என்பதே படத்தின் மைனஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here