Home Movie Reviews ‘மான்ஸ்டர்’ திரைவிமர்சனம்

‘மான்ஸ்டர்’ திரைவிமர்சனம்

0
SHARE
Monster Movie Stills
Monster Movie Stills

சென்னையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண இளைஞர் எந்த உயிரையும் கொள்ளக்கூடாது என்ற நோக்கத்துடன் வாழ்பவர். தனது நண்பர் கருனாகரனுடன் வேலைபார்க்கும் இவர் திருமணத்திற்காக பெண் பார்த்து கொண்டிருக்கார். இந்த நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்று பிரியா பவானியை பெண் பார்க்கிறார். சொந்த வீடு இருந்தால்தான் பெண் தருவார்கள் என்று புது வீடு வாங்குகிறார்.

இந்த வீட்டில் உள்ள ஒரு எலியால் அவர் படும் பாடு வீட்டில் எது வாங்கினாலும் கடித்து தொல்லை கொடுக்கிறது. தினமும் அது தொல்லை எல்லை மீறி போனதும் அதை கொன்று விட விருப்பமில்லாமல் எங்காவது கொண்டு பொய் விட்டுவிட எண்ணுகிறார். இதற்கிடையில் இவருக்கு பிரியாவுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கிய பிரியா ஆசையாக கேட்ட சோபா ஒன்றை இந்த எலி கடித்து நாசம் செய்துவிட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எஸ்.ஜெ.சூர்யா அந்த எலியை கொள்ள முடிவெடுக்கிறார்.

இறுதியில் எந்த உயிரையும் கொள்ள கூடாது என்று வளர்ந்தவர் இந்த எலியை கொன்றாரா? பிரியாவை கரம்பிடித்தாரா? என்பதே கதை எலியால் படும் தொல்லைகள் தாங்க முடியாமல் தவிக்கும் எஸ்.ஜெ.சூர்யா சகஜமான நடிப்பில் அசத்தியுள்ளார். கருணாகரன் காமெடி பெரிதாக ஒன்றுமில்லை. ப்ரியா பவானி குடும்ப பெண்ணாக நடித்துள்ளார் எலியை கிராபிக்ஸ் மூலம் நிறைய்ய இடங்களில் காட்டி பாதி படத்தை எலியை வைத்தே முடித்துள்ளனர். மொத்தத்தில் படம் சுமார் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here