Home Movie Reviews ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ திரைவிமர்சனம்

‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ திரைவிமர்சனம்

0
SHARE
Nenjamundu Nermaiyundu Odu Raja
Nenjamundu Nermaiyundu Odu Raja

சிவகார்த்திகேயனின் புரொடக்ஷன்ஸ் இரண்டாவது தயாரிப்பாக வெளியாகியிருக்கும் திரைப்படம்நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா‘. புதுமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை கமர்ஷியலாக வழங்கியிருக்கிறார்.

ஒரு யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு பிரபலமாக முயற்சிசெய்து கொண்டுயிருக்கிறார்கள் ரியோவும், ஆர் ஜே விக்னேஷ் காந்தும். அவர்களுக்கு அதிகம் பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக கொண்டுயிருக்கிறார்கள்.

அவர்களது நோக்கத்தை புரிந்துகொள்ளும் ராதா ரவி, அவர்களுக்கு பணம் தருவதாகவும், அதற்கு 3 பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறார். அந்த மூன்று பணிகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.

படம் தொடங்கி கதைக்குள் செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் சற்று அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் அதனை ஈடு செய்யும் விதமாக இரண்டாம் பாதி பரபரப்பாக நகர்கிறது.

ரியோ ராஜ் முதல் படத்திலேயே காமெடி,சென்டிமென்ட் என தகுந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் .அவருக்கு இப்படம் ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

ஜர்னலிஸ்டாக ஷிரின் காஞ்ச்வாலாநடித்துள்ளார். இப்படத்தில் முக்கியமான வேடத்தில் விவேக் பிரசன்னா சிறப்பாக நடித்துள்ளார். படம் முழுக்க பிளாக் ஷீப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.துவக்க பாடலிலேயே யூடியூப் பிரபலங்கள் அனைவரையும் இடம்பெற செய்துள்ளனர்.

Overall Rating – 2.5 / 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here