Home Movie Reviews பேரன்பு திரை விமர்சனம்

பேரன்பு திரை விமர்சனம்

0
SHARE
Peranbu
Peranbu

மம்மூட்டி நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடித்திருக்கும் படம் பேரன்பு. இதில் மம்மூட்டி தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மம்மூட்டி 14 வயது மகளாக சாதனா நடித்திருக்கிறார்.

சாதனா மூளை முடக்கு வாதம் நோயால் பாதிக்கப் பட்டவர். இதை தெரிந்த அவரது அம்மா அவரை விட்டு செல்கிறார். அதன் பின் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் மம்மூட்டி மகளுக்காக இங்கு வருகிறார்.

அப்பா மகள் இருவரும் தனி உலகம் என மலை ஒர வீட்டில் இயற்கை சூழலில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் அஞ்சலி நுழைகிறார். ஆனால் அவர் இவர்களின் வீட்டை பறித்து ஏமாற்றி விடுகிறார். அதன் பின் இருவரும் சென்னைக்கு வருகின்றனர். சென்னைக்கு வந்து அங்கு சந்திக்கும் போராட்டங்களே மீதிக் கதை.

மம்மூட்டி மற்றும் சாதனா இவர்களை சுற்றியே படம் நகர்கிறது. யுவனின் இசை படத்திற்கு ஒரு பக்க பலம். தேனீ ஈஸ்வர் அவரது ஒளிப்பதிவில் இயக்கையையும் மலை சார்ந்த இடங்களையும் மிக அழகாக காண்பித்து இருக்கிறார்.

சாதனாவின் இயல்பான நடிப்பு நம்மை அந்த கதாபாத்திரத்தினுள் கொண்டு சென்று விடுகிறது. மொத்தத்தில் அமைதியாக நம் மனதை கவரும் படமாக பேரன்பு உருவாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here