Home Movie Reviews பேட்ட திரை விமர்சனம்

பேட்ட திரை விமர்சனம்

0
SHARE
Petta
Petta

சூப்பர் ஸ்டார் என்றால் யார் என்று மீண்டும் ஒருமுறை திரையில் அசத்தி இருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியின் ரசிகன் படத்தை எடுத்தால் எப்படி எல்லாம் அவரை பார்க்க ஆசை படுகிறாரோ அவ்வாறு இயக்கி பேட்ட படத்தை வெற்றியடைய செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஊட்டியில் இருக்கும் ஒரு கல்லூரி வார்டானாக வருகிறார் ரஜினி. அங்கு படிக்கும் பாபி சிம்ஹா கல்லூரியில் சில ரௌடிசம்களை செய்கிறார். அதே கல்லூரியில் மேகா ஆகாஷ் மற்றும் சனத் ரெட்டி படிக்கிறார்கள். ரஜினி பாபி சிம்ஹாவின் ரவுடி தனங்களை தனது மாசான ஸ்டைலில் அடக்கி ஆழ்கிறார்.

இன்னொரு பக்கம் நவாஸுதீன் சனத் ரெடியாய் கொல்ல நினைக்கிறார். ஏற்கனவே பாபி சிம்ஹா ரஜினியின் மேல் கோபத்தில் இருந்து அவரை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி தனது பேட்டையை விட்டு விட்டு ஏன் இங்கு வார்டானாக வந்தார்? நவாஸுதீன் சிந்திக் ஏன் சனத்தை கொள்ள நினைக்கிறார் ? சனத்தை ரஜினி காப்பாற்றினாரா ? என்பதே மீதி கதை.

ரஜினியின் அனைத்து ஸ்டைல்களையும் இந்த படத்தில் அல்லி கொடுத்து இருக்கிறார். ப்ளாஷ் பாக்கில் த்ரிஷாவுடன் வரும் கதாபாத்திரத்தில் கிராமத்து கெட்டப்பில் வந்து ரசிக்க வைக்கிறார்.

சிம்ரன், த்ரிஷா இருவரும் சிறந்த நடிகைகள் என்று தங்கள் கதாபாத்திரத்தில் நடித்து காண்பித்திருக்கிறார்கள். ஊட்டியில் வரும் காட்சிகள் அனைத்தையும் அழகாக படமாக்கி இருக்கிறார் சினிமாட்டோக்ராபர் திரு.

அனிருத்தின் இசை மரண மாஸாக இருக்கிறது. படத்தில் முழு ரஜினியிசத்தை உணரலாம். கார்த்திக் சுப்புராஜ் ரஜினி கூட்டணி முதல் படத்திலேயே வெற்றியை கண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here