Home South Reel கிராமத்து பையனாக சாந்தனு பாக்யராஜ்

கிராமத்து பையனாக சாந்தனு பாக்யராஜ்

0
SHARE
shanthanu bhagyaraj

நேட்டிவிட்டி பின்னணியில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் படம் இராவண கோட்டம்“. இந்த படத்தை மதயானைக் கூட்டம்புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார் மேலும் கண்ணன் ரவி குரூப் சார்பில் புகழ் பெற்ற தொழிலதிபர் திரு.கண்ணன் ரவி இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார்.

கண்ணன் ரவிதனது முதல் தயாரிப்பு குறித்து கூறும்போது, “வெளிநாட்டிலேயே அதிக காலத்தை செலவழித்தால் நான் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்த போது தமிழ்நாட்டின் உள்ளார்ந்த மண் சார்ந்த மதிப்புகளை வலியுறுத்துகின்ற திரைப்படங்கள் மீது அதிக விருப்பம் உண்டு.

இந்த சூழ்நிலையில் தான் நான் தேடிக்கொண்டிருந்த விஷயங்களுக்கு பொருத்தமான ஒரு கதையை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சொன்னார்என்றார்.

சாந்தனு பாக்யராஜ் நாயகனாக பற்றி அவர் கூறும்போது, “நாயகனை தேர்ந்தெடுக்கும்போது கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக எல்லோராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதில் சாந்தனு நடிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிஎன்றார்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இது குறித்து கூறும்போது, “மதயானைக் கூட்டம் வெளியான போது படத்துக்கு கிடைத்த வரவேற்பும், எனக்கு கிடைத்த பெயரும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே நேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேன். தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.

சாந்தனு பாக்யராஜ் தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு கடுமையாக உழைப்பவர். அவர் இந்த படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் கிராமத்து பையனாக தோற்றத்தையும் ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கை கற்று கொண்டும் மாறிய அவரை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நடிப்பிலும் இதே போல சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். இராவண கோட்டம் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

நாயகனை போலவே, கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றை சிறப்பாக செய்யும் ஒரு நாயகியை தேடி வருகிறோம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றி உரிய நேரத்தில் அறிவிப்போம்என்றார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here