Home Movie Reviews தி லயன் கிங் திரை விமர்சனம்

தி லயன் கிங் திரை விமர்சனம்

0
SHARE
The Lion King Review
The Lion King Review

தி லயன் கிங் திரைப்படம் 1994ஆம் ஆண்டு வெளிவந்த “லைவ் ஆக்சன்” அனிமேஷன் படத்தின் ரீமேக் ஆகும். அயன் மேன் இயக்குநர் ஜான் ஃபெவரு இப்படத்தை இயக்கியிருக்கிறார். ராணி சரபி மற்றும் மன்னர் முபாசா ஆகியோருக்கு அரச சிங்க குட்டி சிம்பா பிறக்கிறது .காட்டில் உள்ள விலங்குகள் ஒரு புதிய வாரிசைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகின்றன.

சிறிய சிம்பாவின் உயிரைக் காப்பாற்ற முயன்று முபாசா இறந்துபோகிறது. தனது தந்தையின் மரணத்திற்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியோடு சிம்பா காட்டில் இருந்து ஓடிவிடுகிறது. பின்னர் முபாசவின் தம்பி ஸ்கார் அரியணையை ஏற்றுக்கொள்கிறார்.

உயிர் பிழைக்க தப்பி ஓடும் சிம்பா, வேறு ஒரு காட்டுக்கு சென்று தான் ஒரு சிங்கம் என்பதை மறந்து பும்பா (காட்டுப்பன்றி) மற்றும் டிபுனுடன் (தேவாங்கு) சேர்ந்து வளர்கிறான்.கழுதைபுலிகளுடன் சேர்ந்து சதி செய்து, ஸ்கார் முபாசாவை கொலை செய்தது சிம்பாவுக்கு தெரியவருகிறது. உருவத்தில் தனது தந்தை போலவே காட்சியளிக்கும் சிம்பா ஸ்காரை வெற்றி பெற்று எப்படி ஆட்சி அமைக்கிறான் என்பதே படத்தின் மீதமுள்ள கதை.

சாசு எனும் மரங்கொத்தி பறவைக்கு குரல் கொடுத்திருக்கும் மனோபாலா, சின்ன சின்ன டைமிங் டயலாக்குகள் மனதை கவர்கிறது. தமிழ் வெர்ஷனின் மிகப்பெரிய பலமே டப்பிங் தான். வில்லன் ஸ்காருக்கு அரவிந்த்சாமியின் குரல் கச்சிதமாக பொருந்தியுள்ளது. சிங்கம்புலி ,ரோபோ சங்கர் என பல கலைஞர்கள் டப்பிங் செய்துள்ளனர். குறை கூற முடியாத அளவிற்கு படத்தை இயக்கியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் வசனங்கள், குரல் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அனைத்தும் அசரவைக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here