Home Movie Reviews வந்தா ராஜாவாத வருவேன் திரை விமர்சனம்

வந்தா ராஜாவாத வருவேன் திரை விமர்சனம்

0
SHARE
VRV
VRV

தெலுங்கில் வந்த அத்தாரின்டிக்கி தாரேதி என்ற படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். சுந்தர் சி சிம்பு காம்பினேஷனில் சிம்புவின் தனி ஸ்டைலை இந்தப் படத்தில் காணலாம்.

கேத்தரின் தெரசா மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் சிம்புவிற்கு ஜோடிகளாக வருகின்றார்கள். இருவருக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுத்துள்ளார் சுந்தர் சி.

நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணன் காதல் திருமணம் செய்துகொண்டதால் அப்பா மகள் இருவரும் பிரிகிறார்கள். அதன் பின் 20 வருடம் கழித்து நாசர் தன் மகளை சந்திக்க ஆசைப்பட்டு பேரன் சிம்புவிடம் உதவி கேட்கிறார்.

தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற வெளிநாட்டில் பணக்காரனாக இருக்கும் சிம்பு சென்னையில் உள்ள தன் அத்தை வீட்டில் ஒரு டிரைவராக சேர்கிறார். பிறகு நாசர் ரம்யா கிருஷ்ணனுடன் சேர்ந்தாரா இல்லையா என்பதே கதை.

இந்த மாதிரி கதையை தமிழ் சினிமா நிறைய பார்த்து இருக்கிறது இருந்தாலும் இதை சிம்புவின் ஸ்டைலான நடிப்பில் பார்க்க வித்தியாசமாகவே இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதியின் இசை பாடல்களை ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் கலகலப்பான குடும்ப கதையாக வந்தா ராஜாவாத வருவேன் படத்தை ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here