Home Movie Reviews வெண்ணிலா கபடி 2 திரை விமர்சனம்

வெண்ணிலா கபடி 2 திரை விமர்சனம்

0
SHARE
Vennila Kabadi Kuzhu 2 Movie review
Vennila Kabadi Kuzhu 2 Movie review

விக்ராந்த், பசுபதி, அர்த்தனா பின்னு நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் வெண்ணிலா கபடிக்குழு 2. இத்திரைப்படத்தை செல்வா சேகரன் இயக்கியிருக்கிறார்.

3 கிராமத்தில் வாழ்பவர் விக்ராந்த். இவரின் பொறுப்பில்லாத அப்பா பசுபதி. அதனால் அவரை குறை கூறியபடியே இருக்கிறார் விக்ராந்த்.. ஒரு கட்டத்தில் தந்தையின் உண்மையான பின்னணி தெரிந்ததும் அவரின் ஆசையை நிறைவேற்ற வெண்ணிலா கபடி குழுவை மீண்டும் இணைத்து வெற்றி பெறுவதே படத்தின் கதை.முதல் பாகத்தின் இறுதியில் வெற்றி பெற்ற வெண்ணலா கபடி குழுவை வேறொரு கதையில் இணைத்து கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் முக்கியமான அம்சமே வெண்ணிலா கபடி குழுவை மீண்டும் கூடுவது தான்..ஆனால் அதன் ஆரம்ப கட்ட காட்சியே இடைவேளைக்கு பின்பு தான் வருகிறது. படத்தின் முதல் பாதியில் படத்திற்கு சம்பந்தமான எதுவுமே இல்லை. விக்ராந்தின் காதல் காட்சிகள் சொல்லவே முடியவில்லை..இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இதே காட்சிகளை வைக்க போகிறார்களோ?

வெண்ணிலா கபடி குழுவை மீண்டும் இணைத்தவுடன் கொஞ்சம் கதை சூடு பிடிக்கிறது.. சிறிது நேரத்திலேயே அது இல்லாமல் போகிறது. முதல் பாகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே கிராமத்து இளைஞர்களின் வாழ்க்கை முறையை திரையில் கொண்டு வந்தது தான்.. அதை இதில் செய்ய தவறியிருக்கிறார்கள். அர்த்தனா பினுவுக்கு மொத்தமே இரண்டு மூன்று காட்சிகள் தான்.. பசுபதி வரும் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் கைதட்டல் பெறுகிறார். ஒளிபதிவு இசை என அனைத்தும் ஓரளவு நன்றாக இருந்தும் திரைக்கதையினால் படம் பெரிதாக ஈர்க்கவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here