Home South Reel வில்லனாக விக்ரம் தம்பி !

வில்லனாக விக்ரம் தம்பி !

0
SHARE
Vikram Brother Arvind John Victor
Vikram Brother Arvind John Victor

தடம் மாறும் மாணவர்கள்

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம்

எப்போ கல்யாணம்

விக்ரம் தம்பி வில்லனாக நடிக்கிறார்

புது இயக்குனர் அறிமுகம் |

பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளின் பாதை தடம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு சரியான வழிகாட்ட யாரும் இல்லை.. இதனால் பெற்றோரும் ஆசிரியர்களும் அதிகம் கவலை அடைகின்றனர். இதற்கு என்ன வழி என்பதை எப்போ கல்யாணம் படம் மூலம் தீர்வு காண வழி சொல்லி இருக்கிறோம். இதில் காதல் , சோகம், நகைச்சுவை , என நவரசங்களையும் கோர்த்து உருவாக்கி இருக்கும் படம் தான் எப்போ கல்யாணம் “. என்கிறார் கதை திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்துள்ள ஏ. இருதயராஜ். இவர் பல முன்னனி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ் சௌத் இந்தியா பட்டம் வாங்கிய சான்ட்ராமிக்சல் , கேபிரியல், லாவண்யா, பூஜா நால்வரும் கதாநாயகிகளாக வலம் வரும் இதில் ரஞ்சித் குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்ன மாலா, வினய்பிரசாத், ஐவன், நிர்மலாதேவி, கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராமசாமி ஆகியோருடன் சிறிது இடைவெளிக்கு பிறகு ஜெயந்தியும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .

விக்ரம் சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர் இதில் வில்லனாக வலம் வருகிறார்.

ரமேஷ் ஒளிப்பதிவையும், ராஜு படத்தொகுப்பையும், ராஜ்கமல் நடன பயிற்சியையும் கவனிக்கின்றனர். முன்னணி இசையமைப்பாளர்கள் பலரிடம் நிறைய படங்களில் பணியாற்றிய என்.எஸ்.கிருஷ்ணகுமார் இசையமைக்க, பாடல்களை டாக்டர் கிருதியா எழுதுகிறார்.

சென்னை பெங்களூர் என இரண்டு மாநிலங்களில் வளர்ந்துள்ள எப்போ கல்யாணம் படத்தை கீர்த்தி புரொடக்சன் சார்பில் ஷைலா, டாக்டர் கீர்த்தவணி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

. இருதயராஜ் டைரக்ட் செய்துள்ள எப்போ கல்யாணம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here