Home Movie Reviews விஸ்வாசம் திரை விமர்சனம்

விஸ்வாசம் திரை விமர்சனம்

0
SHARE
Viswasam
Viswasam

சிறுத்தை சிவா இயக்கத்தில் மறுபடியும் அஜித்தை வைத்து ஒரு குடும்பக் கிராமத்துக் கதையை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். கிராமத்தில் வாழும் அஜித் நயன்தாரவைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. பிறகு அஜித் நயன்தாரா கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகளோடு மும்பைக்கு சென்று விடுகிறார்.

சில வருடங்கள் கழித்து ஊரில் இருக்கும் கோவில் திருவிழாவிற்கு நயன்தாராவை அழைத்து வருமாறு சொந்தங்கள் சொல்ல, அவரை அழைக்க மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகளுக்கு ஜெகபதி பாபுவால் ஏதோ ஆபத்து இருப்பது தெரிய வருகிறது.

தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார்? எதனால் ஜெகபதி பாபு தன் மகளை கொல்ல நினைக்கிறார் ? நயன்தாரா அஜித் மறுபடியும் சேர்ந்தார்களா ? என்பதே மீதி கதை.

இதை சிவா கிராமத்து வாசனையில் சொந்த பந்தங்களுடன் இயக்கி இருக்கிறார். அஜித், நயன்தாரா காதல், அப்பா மகள் பாசமென்று அணைத்து எமோஷ்னல் காட்சிகளை அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

அஜித்தின் மாசான பன்ச் வசனங்கள் அதிர வைக்கிறது. நயன்தாரா ஹோம்லி கெட்டப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். தம்பி ராமையா, ரோபோ ஷங்கரின் காமெடி சிரிக்க வைக்கிறது.

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை கொஞ்சம் அழுத்தமாக இயக்கி இருக்கலாம். தமிழ் சினிமாவில் சற்று பழக்கப் பட்டக் கதை தவிர அஜித்தின் புதுவிதமான ஸ்டைல் மற்றும் நடிப்பு, கிராமத்து சூழல், குடும்ப கதை போன்ற விஷயங்களுக்காக விஸ்வாசத்தை ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here